இந்த பதிப்பு வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் பயன்படுத்தும் Internet Call அதாவது Voip Call சில நேரங்களில் அந்த நாடுகளில் தடைசெய்யப்படலாம்.அதை மீண்டும் பயன்படுத்த வழிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு நான்கு விதமான புராக்ஸி மென்பொருள்களை இங்கு தருகிறேன் இதில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும்.
Ultra VPN அல்லது Hotspot Sheild தரவிறக்கி கணினியில் வழக்கமான முறையில் இன்ஸ்டால் செய்யவும் இப்போது உங்கள் கணினியின் திரையில் வலதுபக்கம்(டாஸ்க்பாரில்) கீழ் பகுதியில் புதிதாக ஒரு ஐகான் வந்திருக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும் .
அந்த ஐகானை உங்கள் எலியால் வலது கிளிக்கில் கனைக்ட் என்பதை தேர்ந்தெடுங்கள் இப்போது புதிதாக ஒரு விண்டோ திறக்கும் அதில் யூசர் பெயர் என்பதில் ஏதாவது ஒரு பெயரை கொடுக்கவும் கடவுச்சொல்லில் எதாவது ஒன்றை கொடுக்கவும் அவ்வளவுதான் இனி அந்த சிவப்பு நிற ஐகான் பச்சை நிறமாக ஆகியிருக்கும் .
அதே நேரத்தில் உங்களி கணினியில் அடையாள ஐபி எண் மாற்றப்பட்டிருக்கும், இந்த புராக்ஸி தேவையில்லாத போது அந்த ஐகானை கிளிக்கி டிஸ்கனைக்ட் என்பதை தேர்ந்தெடுக்கவும் இதன் வழியாக இனி தடை செய்யப்பட்ட தளம் மற்றும் வாய்ப் சர்வீஸ் பயன்படுத்த முடியும். Ultra VPNக்கு மட்டுமே பயணர் பெயர் மற்றும் கடவுச்சொல் அவசியம், Hotspot Sheildக்கு அதன் அவசியம் இல்லை.
No comments:
Post a Comment