Saturday, 15 October 2011

உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்


தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த
வகையில் இப்போது நம் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை
வைத்து ஆன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்
இதைப்பற்றி தான் இந்த பதிவு. மொபைல் டிரேஸ் அல்லது போன்
டிரேஸ் என்று சைபர்கிரைம்-ல் உள்ளவர்கள் கண்டுபிடிக்கும் அதே
தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும்
ஒரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு
போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த
இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது
போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று ( U.S or International)
தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும் அதுமட்டுமின்றி
மேப்-ம் சேர்த்தே கொடுக்கின்றனர்.
இணையதள முகவரி: www.tp2location.com
படம் 1
இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி உங்கள் போன்
நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற
பட்டனை அழுத்தவும் இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின்
விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).
படம் 2
படம் 3
அதே போன் நம்பரின் மேப்-ஐ பார்ப்பதற்கு படல் 2-ல் உள்ளது போல் map+
என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப் -ஐயும் பார்க்கலாம்.
படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது.

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க



மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை
1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம்http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

செல்போனின் இரகசிய குறியீட்டு இலக்கங்கள்


கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு குறியீட்டு எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் கைத்தொலைபேசியின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில குறியீட்டு எண்களை வகுத்து தந்துள்ளன. இது கைத்தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.
LG வகை கைத்தொலைபேசியின் குறியீட்டு எண்கள்
கைத்தொலைபேசியின் Test Mode க்கு செல்ல –– 2945#*#
எல்ஜி கைத்தொலைபேசியின் ரகசிய Menu ஐக் கொண்டு வர – 2945*#01*#
கைத்தொலைபேசியில் உள்ள மென்பொருள் தொகுப்பின் பதிப்பு எண் அறிய – *8375#
கைத்தொலைபேசியின் IMEI எண்ணை அறிய –*#06# இது எந்த கைத்தொலைபேசிக்கும் பொருந்தும்.
கைத்தொலைபேசியின் (LG 7010 மற்றும் 7020) Sim Card lock சரி பார்க்க-2945#*70001#
LG-B 1200 கைத்தொலைபேசியின் Sim Lock சரி செய்திட 1945#*5101#
LG-B 5200 மற்றும் 510W கைத்தொலைபேசிகளின் Sim Lock Menu சரி செய்திட 2945#*5101#
LG 500 மற்றும் 600 கைத்தொலைபேசிகளின் Sim Lock சரி செய்திட 2947#*
NOKIA தொலைபேசிகளுக்கான இரகசிய குறியீட்டு இலக்கங்கள் 
இவற்றின் மூலம் உங்கள் NOKIA கைத்தொலைபேசிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிழைகள் இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிழைகளின் தன்மையை அறிய உதவும்.
*#7780# –Restore Factory setting க்கு
*#3283# -தொலைபேசி தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# – Sim கடிகாரத்தை நிறுத்த
*#67705646# -Operator Logo ஐ நிறுத்த
*#73# – Reset Timer
*#0000# –மென்பொருள் பதிப்பு குறித்து அறிய
*#92702689# – தொலைபேசியின் உத்தரவாதம் குறித்த தகவல்களுக்கு (தொடர் இலக்கம் , எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி, திருத்தம் செய்த திகதி)

SAMSUNG கைத்தொலைபேசிகளின் குறியீட்டு இலக்கங்கள்


SAMSUNG தந்த பழைய கைத்தொலைபேசிகளுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.
*#9999# –தொலைபேசியின் மென்பொருள் பதிப்பை பற்றி அறிய
#*3849# – Reboot செய்வதற்கு
#*2558# – Time ON/OFF
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான கைத்தொலைபேசிகளை Unlock செய்திட
#*4760# – GSM. வசதிகளை ON/OFF செய்திட
*#9998*246# – Memory & Battery
*#7465625# – மொபைலின் Lock எந்த நிலையில் உள்ளது என்று அறிய
*#0001# – தொடர் இலக்கத்தை அறிய
*2767*637# –Unlock செய்திட
*#8999*636# –Storage திறனைக் காட்ட
*2562# – Reboot செய்திட

GPRS,WiFi உதவியுடன் எந்த நாட்டிற்கும் கைத்தொலைபேசியிலிருந்து தொடர்புகொள்ள



இந்த மென்பொருட்கள் மூலமாக நாங்கள் இன்னொருவருடன் குரல் வழியாகவோ(Voice) , தகவல்களை எழுத்து மூலமாக(Text Chat) பகிர்ந்து கொள்ளவோ முடியும். இந்த மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி வழங்குனர்களால் GPRS கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும். இவை மிகவும் செலவு குறைந்த தொடர்பாடல் மென்பொருட்கள் ஆகும். இவற்றினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் மிக குறைந்த செலவில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பாவிக்க வேண்டுமாயின் GPRS வசதியுள்ள கையடக்க தொலைபேசிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
3G,3.5G வசதியுள்ள கையடக்க தொலைபேசிகள் இன்னும் சிறப்பானவை. இத்தகைய கையடக்க தொலைபேசிகள் மூலமாக குரல் வழி தொடர்பினை இலகுவாக மேற்கொள்ளமுடியும்.
இதோ அத்தகைய மென்பொருட்கள் சிலவும் அவற்றின் சுட்டிகளும்.
1. eBuddy – Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க இணையச்சுட்டி: eBuddy
2. Snaptu – YouTube, MySpace, hi5, Orkut, Friendster, Wikipedia, Gmail, eBay, Bebo போன்றவற்றின் பயனர் கணக்கினை பயன்படுத்தி தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் பல வசதிகளும் இதிலுள்ளன.
தரவிறக்க இணையச்சுட்டி:Snaptu
3. Nimbuzz – Skype,facebook, Windows Live Messenger /MSN, Yahoo!, ICQ, AIM, Google Talk, Gadu-Gadu, Hyves போன்றவற்றின் பயனர் மேலும் சில melummmemeதொடர்பாடல்களை மேற்கொள்ள முயும். இது குரல்வழி தொடர்பாடலுக்கு மிக சிறந்த மென்பொருள்.
தரவிறக்க இணையச்சுட்டி: Nimbuzz
4. mig33 – Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க இணையச்சுட்டி: mig33
மேலும் சில சுட்டிகள் இதோ:
Rocketalk – தரவிறக்க இணையச்சுட்டி: Rocketalk
Nefanasa Yahoo – தரவிறக்க இணையச்சுட்டி: Nefanasa Yahoo
MyXenZo – தரவிறக்க இணையச்சுட்டி: MyXenZo

Mobile Software பற்றிய வலைத் தளம்.



நிறைய பேர் தமது கை பேசிக்குரிய மென் தொகுப்புகள், மற்றும் விளையாட்டு மேன்தொகுப்புகளை இணையத்தில் தேடி இருப்பார்கள்.
நான் சொல்லும் இந்த தளத்தில் ஏறக் குறைய எல்லா வகை மென் தொகுப்புகளும், எல்லா கை பேசிகளுக்கும் கிடைக்கின்றன.
இந்த தளத்தில் திருட்டு (pirated/cracked) மேன்தொகுப்புகளும் நிறைய இருப்பதால் கவனமாக தேவையான தொகுப்புகளை தேர்ந்தெடுத்து உங்கள் கை பேசியில் நிறுவலாம்.
சுட்டி இங்கே.

உங்கள் மொபைலில் இலவசமாக விடியோ கால் செய்ய.



நீங்கல் wi-fi வசதி உள்ள மொபைல் வைத்திருப்பவரா?,உங்கள் மொபைலில் இலவசமாக விடியோ கால் செய்யலாம்.கீழ்க்காணும் இணயத்திற்கு சென்று
உங்கள் மொபைலுக்கான Softwareயை Download  செய்து பயன்படுத்தலாம்.
உங்களுக்கு இனி Laptop,PC தேவையில்லை மொபைலில் இருந்தபடியே video chat செய்யலாம்.

IMEI எண்ணை வைத்து செல்போனின் விபரங்களை அறிவது எப்படி?



பொதுவாக அனைத்து கைபேசிகளுமே IMEI என்றழைக்கப்படும் ஒரு Unique 15 digit code ஆல் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த IMEI ஐ வைத்தே நீங்கள் உங்கள் செல்போனின் தயாரிப்பாளர்,மாடல் எண்,விற்ப‌னைக்கு வந்த வருடம், எந்த நாட்டில் வெளியிடப்பட்டது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளலாம். இதனை சோதிக்க முதலில்http://www.numberingplans.com/?page=analysis⊂=imeinr என்ற இணையத்திற்க்கு செல்லவும். பின்னர் உங்களது IMEI எண்ணை தட்டச்சு செய்யவும்.
குறிப்பு:
பொதுவாக IMEI எண்ணை அறிய உங்களது செல்போனின் *#06# என்பதை அழுத்தவும். இல்லையேல் உங்களது செல்போனின் பேட்டரியை கழட்டிவிட்டு அடியில் பார்த்தால் IMEI எண்ணானது காணப்படும்.
நீங்களும் உங்க‌ளது செல்பேசியை சோதித்து பாருங்களேன்.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவச எஸ் எம் எஸ்.



நண்பர்களே வெளிநாட்டில் நம் நண்பர்கள் உறவிணர்கள் எத்தனையோ பேர் இருக்லாம் அதிலும் குறிப்பாக இந்த இடுகை எழுதுவதற்கு காரணம் துபாய் மக்களுக்காக தான்
துபாயில் வசிப்பவர்கள் இந்தையாவிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்ப 0.60 பைசா ஆகும் அதாவது இந்தியாவிற்கு 7.20 ரூபாய் ஆகும் சரி இனைய வழி அனுப்புவதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கிறது ஆனால் என்ன நிபந்தனைகள் அதிகம் இருக்கும் அல்லது ஒரு நாளிற்கு இரண்டு குறுந்தகவல் மட்டுமே அனுப்புவதாக இருக்கும் 160by2.com என்கிற தளம் முன்பெல்லாம் இலவச குறுந்தகவல் சேவையை வழங்கியதாம் ஆனால் சமீபத்தில் அங்குள்ள சர்வீஸ் புரைவைடர் தடை செய்து விட்டதாக தகவல்.
நானும் ஒரு தளத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இதில் ஒரு பிரச்சினை அதாவது உங்களுக்கான அக்கவுண்ட் தொடங்குவதற்கு இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்களின் அலைபேசி எண்ணையோ அல்லது வீட்டில் இருக்கும் அலைபேசி எண்ணையோ பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்து விடலாம் இங்கு ரிஜிஸ்டர் செய்து முடித்தவுடன் நீங்கள் கொடுத்த அலைபேசி எண்ணிற்கு ஒரு கோடு அனுப்பிவைப்பார்கள் அதை மீண்டும் இந்த தளத்தில் பதிந்துவிடுங்கள் அவ்வளவுதான் இனி இதில் இருந்து கட்டற்ற குறுந்தகவல் அனுப்பமுடியும் எந்த நிபந்தனையும் இல்லை ஒவ்வொரு குறுந்தகவலும் 140 எழுத்துகளை கொண்டதாக இருக்கும் .
தளத்திற்கு செல்ல படத்தை கிளிக்குங்கள்
என்ன நண்பர்களே சந்தோஷம் தானே சரி துபாயில் இருந்து வேறு சில நாடுகளுக்கு குறுந்தகவல் சேவை இலவசமாக இருக்கிறதா என கேட்கும் நண்பர்களுக்காக இந்த தளம் பயன்படுத்தி பாருங்கள் இதில் ரிஜிஸ்டர் செய்ய உங்கள் துபாய் அலைபேசி எண்ணையே பயன்படுத்தலாம்
தளத்திற்கு செல்ல படத்தை கிளிக்குங்கள்
என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு முன்னமே தெரியுமா பரவாயில்லை உங்களால் முடிந்தவரை இந்த தகவல் மற்ற்வர்களுக்கும் சென்றடைய உதவுங்கள்.

நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்.



நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்
Advanced Call Manager
இந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள் விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது தானாக பதில் சொல்லும் அதில் அவருக்கே பணம் செலவாகும் வேண்டுமானால் எப்போது தொடர்பு கொண்டாலும் உங்கள் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் நீங்கள் விரும்பினால் மட்டும் உங்களோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கலாம்.
Auto Call Recorder
இந்த Auto Call Recorder உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கும் வரும் அழைப்புகளையும் நீங்கள் தொடர்பு கொள்ளும் அழைப்புகளையும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யும் வசதி இருகிறது இதை உங்களுக்கு தேவைபடும் போது மட்டும் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் தானியங்கியாக ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
Browser
இந்த Browserஉங்கள் அலைபேசியில் இருந்து இனையத்தில் உலவ நல்ல வசதிகளை தருகிறது இது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.
FM Manager
இந்த FM Manager உங்கள் அலைபேசியில் எப் எம் வசதி இருந்தால் அதை மேலும் மேம்படுத்திகொள்ள இதில் நிறைய வசதிகள் இருக்கிறது FM உள்ள அலைபேசிகளில் மட்டுமே இது பயன்படும்.
Full Caller Screen
இந்த Full Caller Screen சாதரணமாக நோக்கியாவில் அழைப்பு வரும்போது அவர்களின் போட்ட்வையும் காணும் வசதி இருக்கிறது ஆனால் சிறிய அளவில் இருக்கும் இந்த மென்பொருளை நிறுவிக்கொண்டால் முழுத்திரை அளவிற்கு அழைப்பு வரும்போது போட்டோவின் அளவு இருக்கும்.
Games
இந்த Games தரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பொழுதுபோக்கிற்காக விளையாட உதவும்.
Mobile Talk
இந்த Mobile Talk பொட்டலத்தை தரவிறக்கி இதில் நீங்கள் விருப்பபடும் மென்பொருளை உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே இலவசம் தான் என்ன எல்லாவற்றிற்கும் இனைய வசதி வேண்டும்.
MP3 Player
இந்த MP3 Player நல்ல தரத்துடன் இசையை கேக்க உதவுகிறது உங்களுக்கு தகுந்தமாதரி ஒவ்வொரு பாடலையும் தனித்தனியாக யூக்கலேசர் செய்து சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது இது நிச்சியம் உங்களுக்கு பிடிக்கும்.
Msg and Personal File Locker
இந்த Msg and Personal File Locker தரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்கள் அலைபேசியில் எந்தெந்த தகவல்கள் மறைக்க நினைக்கிறீர்களோ அத்தனையையும் மறைத்து வைத்துக்கொள்ளலாம் நீங்கள் உபயோகபடுத்தி பாருங்கள் சந்தோஷப்படுவீர்கள்.
Smart Movie
இந்த Smart Movie மென்பொருள் உங்கள் வீடியோவை பார்க்கும் வசதியை மேம்படுத்தி தருகிறது முக்கியமாக எளிதான பார்வேர்டு ரீவைண்ட் வசதி இதில் தவிர்க்க முடியாதது.
Sms Guard
இந்த Sms Guard மென்பொருள் உங்கள் அலைபேசியில் இருக்கும் குறுந்தகவல்களை மறைக்க உதவி செய்கிறது இருந்தாலும் இதன் சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன் நீங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு கருத்துரையில் சொல்லவும்.

Type Tamil SMS

இந்த Type Tamil SMS மென்பொருள் தமிழில் எழுத உதவுகிறது அதாவது தமிழ் மொழியை ஆதரிக்காத அலைபேசியிலும் தமிழில் எழுத முடியும்.
Window 7 Theme
இந்த Window 7 Theme தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் உங்களுக்கு வித்யாசமான தீம் உங்கள் அலைபேசியில் இருக்கும்
Voice Recorder
இந்த Voice Recorder இரண்டு விதமாக பயன்படுகிறது ஒன்று வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய இயலும் மற்றொன்று சாதாரண முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும் தேவையென்றால் தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும்
Wi Fi
இந்த Wi Fi மென்பொருள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கே தெரியும் இதன் உபயோகம் என்னவென்று.

உலகம் முழுவதும் இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த.



உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அதிக நேரம் பேச முடியாது,ஏதேனும் அவசர தேவைக்கு பயன்படுத்தலாம்.

Googleன் இலவச தொலைபேசி வழி தேடல்.



நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் மொபைலில் உங்களுக்கு தேவையான தகவல்களை தேடிப்பெறலாம்.

180041999999

என்ற Toll Free எண்ணிற்கு கால் செய்து உங்களுக்கு தேவையான தகவல்களை கூறவும் உடனே அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு SMSஆக அனுப்பிவைக்கும்.உதாரணமாக உங்களுக்கு Cricket score  தெரியவேண்டும் என்றால் Cricket என்று கூறவும்.உடனே அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு SMSஆக அனுப்பிவைக்கும்.

தடை செய்யப்பட்ட Internet Call அதாவது வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம் .


இந்த பதிப்பு வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் பயன்படுத்தும் Internet Call அதாவது Voip Call சில நேரங்களில் அந்த நாடுகளில் தடைசெய்யப்படலாம்.அதை மீண்டும் பயன்படுத்த வழிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு நான்கு விதமான புராக்ஸி மென்பொருள்களை இங்கு தருகிறேன் இதில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும்.
Ultra VPN அல்லது Hotspot Sheild தரவிறக்கி கணினியில் வழக்கமான முறையில் இன்ஸ்டால் செய்யவும் இப்போது உங்கள் கணினியின் திரையில் வலதுபக்கம்(டாஸ்க்பாரில்) கீழ் பகுதியில் புதிதாக ஒரு ஐகான் வந்திருக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும் .
அந்த ஐகானை உங்கள் எலியால் வலது கிளிக்கில் கனைக்ட் என்பதை தேர்ந்தெடுங்கள் இப்போது புதிதாக ஒரு விண்டோ திறக்கும் அதில் யூசர் பெயர் என்பதில் ஏதாவது ஒரு பெயரை கொடுக்கவும் கடவுச்சொல்லில் எதாவது ஒன்றை கொடுக்கவும் அவ்வளவுதான் இனி அந்த சிவப்பு நிற ஐகான் பச்சை நிறமாக ஆகியிருக்கும் .
அதே நேரத்தில் உங்களி கணினியில் அடையாள ஐபி எண் மாற்றப்பட்டிருக்கும், இந்த புராக்ஸி தேவையில்லாத போது அந்த ஐகானை கிளிக்கி டிஸ்கனைக்ட் என்பதை தேர்ந்தெடுக்கவும் இதன் வழியாக இனி தடை செய்யப்பட்ட தளம் மற்றும் வாய்ப் சர்வீஸ் பயன்படுத்த முடியும். Ultra VPNக்கு மட்டுமே பயணர் பெயர் மற்றும் கடவுச்சொல் அவசியம், Hotspot Sheildக்கு அதன் அவசியம் இல்லை.

Friday, 7 October 2011

Search Mp3 songs (Long mp3)



* LongMp3.com is India's best music search engine *
* You can Search and Download songs from India's regional Movies *
* You can Search by either Movie name or Song name to get better search results *
* Do not include general keywords such as mp3 songs, movie songs etc. *
* All contents on our site only for promotional purpose only! *


Search Music:Link:Long mp3

Keywords: Gajini, Dil se re, Arya etc.
Also try: Advanced Search



Top 100 Songs

icon Bollywood

icon Tamil

icon Malayalam

icon Telugu
icon Kannada

Any language songs search all songs download for free 

Mobile Holywood Movies (Mobitamilan.net)

folder 1994(10)
folder 1995(10)
folder 1997(3)
folder 1998(17)
folder 2000(5)
folder 2001(6)
folder 2002(11)
- Page: [1] 2 3

1994-2011 all and full movies  added  this links

Compressed Mp3 Dowmload(Mobitamilan.net)

 Enter here for compressed mp3
 
click this link  you download for free mobile songs